
எதிர்வரும் 27ஆம் திகதி பாடசாலை ஆரம்பித்தல் தொடர்பான விஷேட அறிவித்தல் ஒன்றை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. இதன்பிரகாரம்
ஜூலை 27 தொடக்கம் அனைத்துப் பாடசாலைகளும் தரம் 11, 12, 13 வகுப்புக்களுக்காக ஆரம்பிக்கப்படுகின்றன
பிள்ளைகளைப் பாடசாலைக்கு அழைக்கும்போது ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டதன்படி, கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சின் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படல் வேண்டும்
தரம் 11, 12, 13இற்கு காலை 7.30 தொடக்கம் மாலை 3.30 வரை பாடசாலை நடைபெறும்
மேலும், ஏனைய அனைத்து வகுப்புக்களுக்கும் எதிர்வரும் ஓகஸ்ட் 10 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்
தேர்தல் தொடர்பான பாடசாலைகளை ஆயத்தப்படுத்தலுக்காக அப்பாடசாலைகளில் அதிபர்கள் மற்றும் உதவி அதிபர்கள் ஜூலை 28, 29, 30, 31 ஆம் திகதிகளில் கட்டாயம் சமூகளிக்க வேண்டும்
இதன் ஊடக வெளியீட்டை இங்கே பார்வையிடலாம்
Tags:- Schools, Students, Teachers, Principals, Reopens, Lanka Educations, July, Learn Easy, Corona, Ministry, Education, Classes, Special, Notice, Announcement